“திலகன்! எனக்கென்னமோ உங்கம்மா ஏர்-போர்ட்டுக்கு வர வேண்டாமுன்னு தோணுது,” என்றான் ஜானி. “நான் உன்னை ஸீ-ஆஃப் பண்ண வர்றேன். அவங்க வீட்டிலே ரெஸ்ட் எடுக்கட்டும்.”
சுனிதா எவ்வளவோ மறுத்தும், திலகன் அவளை ஏர்-போர்ட்டுக்கு வரக்கூடாதென்று திட்டவட்டமாகக் கூறி விட்டான். கால் டாக்ஸி வந்ததும் திலகனோடு ஜானியும் அதிலேறி உடன் சென்றான். போகிற வழியெல்லாம் திலகன் சுனிதாவின் உடல்நிலை பற்றியே கவலையோடு புலம்பிக்கொண்டு வந்தான்.